புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் கோர விபத்து! இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் வடகாடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டுபேர் உயிரிழந்துள்ளனர்.

மாங்குளம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கி சென்ற கெப் ரக வாகனம் வடகாடு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துள்ளானதிலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார் .விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .