புதினங்களின் சங்கமம்

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வித்தியாசமான கள்ளி!!

நோய்வாய்ப்பட்டுள்ளதாக போலியாக குறிப்பிட்டு, தனது ஏழு வயது மகனை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுடன் தங்கியுள்ள பெற்றோரின் பல கைத்தொலைபேசிகளை திருடிய பெண்ணொருவரை மார்ச் 5 வரை விளக்கமறியலில் வைக்கமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனமதித்த தனது மகனின் உதவியுடனேயே இவர் கைத்தொபேசி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தனது தாயின் கட்டளையின் பேரில் தான் தொலைபேசிகளை திருடியதாகவும், கையடக்கத் தொலைபேசிகளைத் திருடவில்லை என்றால், தனது தாய் தன்னை அடிப்பதாகவும் ஏழு வயது மகன் பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

திருடப்பட்ட செல்போனை தனது தந்தையிடம் அம்மா கொடுப்பதாக அவர் கூறியிருந்தார்.