Home சினிமா “கில்மிஷா ஒரு ஸ்டார்” மிரண்டு போன நடுவர்!

“கில்மிஷா ஒரு ஸ்டார்” மிரண்டு போன நடுவர்!

“கில்மிஷா ஒரு ஸ்டார்” என புகழ்பெற்ற இந்திய பன்மொழி, திரைப்படப் பின்னணி பாடகர், பாடலாசிரியர் ஸ்ரீனிவாசன் பாராட்டியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை சிறுமி கில்மிஷா போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு கலக்கி வருகின்றார்.

இவர் “குறுக்கு சிறுத்தவளே..என்னக் குங்குமத்தில் கரைச்சவளே” பாடலை பாடி அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தார்.

இதனை பார்த்து நடுவராக இருந்த பாடகர் ஸ்ரீனிவாசன் கில்மிஷாவை பாராட்டியிருந்தார்.என்னை பொருத்தவரை கில்மிஷா ஒரு ஸ்டார். குயில் பாட்டு பாடியதில் இருந்து அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவ்வளவு அருமையாக பாடியதாக குறிப்பிட்டார்.

வழமை போல நேற்றைய நிகழ்ச்சியிலும் பாராட்டுக்களை குவிந்த கில்மிஷாவுக்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவு அதிகரித்து வருகின்றது.

இதேவேளை, கில்மிஷாவின் உத்தியோகபூர்வ கணக்கில் அவர் வெளியிட்ட பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.