சஹ்ரான் குழு பயன்படுத்திய அதி நவீன மோட்டார் சைக்கிள்!! நடந்தது என்ன?
தௌஹீத் ஜமா அத் அமைப்பினால் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த உயர்சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
கம்பொல பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இது மீட்கப்பட்டது.
கம்பொலவில் பாதணிகம் ஒன்றில் பதுங்கியிருந்தபோது, கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளான சாதிக் அப்துல் ஹக், சாகிட் அப்துல் ஹக் ஆகிய சகோதரர்களிடம் நடத்திய விசாரணையிலேயே இந்த மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது. ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இந்த மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
சில அதிகாரிகளிற்கு 2 இலட்சம் ரூபா வரை பணம் கொடுத்து மோட்டார் சைக்கிள் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்படாத இந்த மோட்டார் சைக்கிளில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்டு பாவிக்கப்பட்டுள்ளது. அதி சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் என்பதால், மாவனெல்ல உள்ளிட்ட சில இடங்களில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட நடவடிக்கைக்கும் இந்த மோட்டார் சைக்கிளையே பாவித்துள்ளனர்.