புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு யாழ் குடிமகனின் ஓர் அவசரமான வேண்டுகோள்!!
இங்கு யாழ்ப்பாணத்தில் வாழும் எமக்கு எல்லா பொருட்களும் தாராளமாக, தேவைக்கு அதிகமாக இலவசமாக கிடைக்கின்றன.
முக்கிய அத்தியாவசிய பொருள் ஒன்றைத்தவிர
1- 6 தண்ணீர் இல்லாத இடங்களுக்கு பவுசர் மூலம் தாராளமாக தண்ணீர் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
2- பாண், மரக்கறிவகைகள், மீன் போன்றன தாராளமாக வீடு தேடிவருகின்றன.
3. சமூர்த்தி மூலம் 10 ஆயிரம் பணமும், 5ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் வழங்கப்படுகின்றன.
4. கிராம சேவர்கள், பிரதேச சபையினர்கள் மூலம் வீடுவீடாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
5- இன்னும் சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ்.. போன்ற நாடுகளில் வாழும் தமழ் மக்கள் இங்குள்ள அமைப்புகள் மற்றும் இங்குள்ள மக்களுக்கு பணம் அனுப்பி சர்வோதயம், கோயில்கள் மற்றும் பல அமைப்புகள் மூலம் மா, அரிசி, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்கி போட்டிபோட்டு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
6. மருத்துவ வசதிகள் வீடுதேடிவருகின்றன.
7. வங்கிகாரர்களும் வீடு தேடி வருகிறார்கள்.
ஆனால் எங்கள் (குடி)மக்களின் முக்கிய தேவையான மதுபானம் (மதுபான கடை மூட்டியதால்) மதுபானம் வாங்க முடியாமல் மிகவும் திண்டாடுகின்றோம்.
கள்ளுதான் இன்று எங்கள் தேவையை பூர்த்தி செய்கிறது.
அதுவும் ஒருபோத்தல் கள்ளு 100ரூபாய்க்கு இங்கு விற்கிறார்கள்.
காலையில் 3போத்தல் கள்ளும் பின்னேரம் 3போத்தில் கள்ளும் குடித்தால்தான் ஓரளவு எங்கள் வாழ்க்கையை இப்போதைக்கு ஓட்டக்கூடியதாக இருக்கிறது.
நாள் ஒன்றுக்கு 600ரூபாய் கட்டாயம் ஒவ்வொரு குடி மகனுக்கும் தேவையாக இருக்கிறது. மாதம் 18ஆயிரம் ரூபாய் வேண்டும்.
உடனடியாக இதை கவனத்தில் கொண்டு முடிந்தவரை தனிநபராகவே, புலம்பெயர் தேசத்தில் இயங்கும் சங்கங்கள், ஒன்றியங்கள் மூலோ அல்லது வேறு அமைப்பு வழியாகவோ பணத்தை எப்படியாவது அனுப்பிவையுங்கள்.
அல்லாவிட்டால் நாம் இறந்துவிட நேரும். நாம் இறந்துவிட்டால் நீங்கள் இங்கு வந்து யாருக்கு காசுகொடுப்பீர்கள்??
நீங்கள் உங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் வந்து சாகப்போகிறீர்கள். நாங்கள் இங்கு குடியில்லாமல் சாகப்போகிறோம்.
நீங்கள் வழமையாக கோயில்களுக்கு அனுப்பும் (அன்னதாம் கொடுக்கும்) காசுகள் உங்களுக்கு இப்பொழுது மிச்சம்தானே?
வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த ”பரதேசி நாய்” ஒன்று எமக்கு ஆயிரம் ரூபாய் பணம் தந்தது. அதை நாங்கள் வாங்கவில்லை. அவரின் மூஞ்சியில எறிந்துவிட்டோம். 5000ரூபாய் தந்தால்தான் வேண்டுவோம் என்பது அந்த பரதேசிக்கு தெரியாதா??
சுவிஸ் மற்றும் லண்டன் காரர்கள்தான் இங்கு நமக்கு அள்ளி வழங்குகிறார்கள்.
மற்ற நாட்டுகாரர்கள் பஞ்சபரதேசிகளாக இருக்கிறார்களே ஏன்??
கொரோனா வியாதி வந்து சாகமுன்பு உங்களிடமிருக்கும் பணங்களை எமக்கு அனுப்பிவையுங்கள்.
-தாங்ஸ்-
யாழ்ப்பாணக் குடிமகன்

