கோப்பாய் மரக்காலையில் கசிப்பு விற்ற பெண் கைது!
கோப்பாயில் மரக்காலையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அத்தியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் மத்தி பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றை கோப்பாய் பொலீஸார் சற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந் பெண் ஒருவர் 10 லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 39 வயதுடைய பெண், நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

