வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் குயின்ரனும் காயத்திரியும் செய்த அசிங்கமான வேலை!!
பொருளாதார நெருக்கடி தாண்டவம் ஆடும் இந்த நேரத்தில் இடமாற்றம் என்ற பெயரில் கல்வி அதிகாரிகளான வயது வந்த பெண்களையும், குழந்தைகள் உள்ள பெண்களையும் தூர இடங்களுக்கு அனுப்பி அவர்களை அசிங்கப்படுத்தும் செயலை மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸும், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் காயத்திரியும் செய்துள்ளதாக கல்வி அதிகாரிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
கண் துடைப்புக்கு கொஞ்சக் காலம் கிளிநொச்சியில் கடமை புரிந்த காயத்திரி பிள்ளைப் பேற்றைச் சாட்டி வீட்டுக்கு அண்மையில் உள்ள வலிகாமம், தென்மராட்சி, யாழ்ப்பாண வலயங்களிலேயே அதிக காலம் கடமையாற்றி, தற்போது மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். இந்த இடமாற்றத்தில் தனது நண்பிகளான இருவரை இடமாற்றம் செய்யாது பாதுகாத்துள்ளார். அத்துடன் குயின்ரஸ் தனக்கு வேண்டிய பலரை இடமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளார். இவர்களில் வெளிமாவட்ட சேவையை செய்யாதவர்களும், இரண்டு வருடங்களுக்குள்ளான வெளிமாவட்ட சேவை செய்தவர்களும் அடங்குகின்றனர். ஏனைைவர்கள் குழம்பக்கூடாது என்பதற்காக மேலும் சிலருக்கு “கொஞ்சக் காலத்தில் திரும்ப எடுப்பேன்” என்ற உறுதிமொழியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு மேல் தூர இடங்களில் (வன்னி, மன்னார், முல்லைத்தீவு) கடமையாற்றி யாழ்ப்பாணம் வந்தவர்களுக்கு மீண்டும் தூர வலயங்களுக்கே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா, முல்லைத்தீவு வலயங்களில் தற்போது கடமையாற்றுபவர்களுக்கு தீவக வலயம் வழங்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் பொருத்தமற்ற தூர இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமக்கு வேண்டிய சிலருக்கு யாழ்ப்பாணத்துக்குள்ளும், வசதியான இடங்களும் வழங்கப்பட்டுள்ள அதேவேளை மாகாண கல்விப் பணிப்பாளருடன் முரண்பட்ட சிலருக்கு பழிவாங்கும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

