புதினங்களின் சங்கமம்

யாழில் மருமகனை அடித்து கொன்ற குடும்பம் !! மாட்டியது எப்படி !!

மருமகனை( மகளின் கணவர்) மாமி உள்ளிட்டோர் இணைந்து அடித்துக் கொன்றுவிட்டு அவர் ஹாட் அட்ராக்கில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய மாமி, மகள், மகன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று(06) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ். ஏழாலை கிழக்கில் நடந்துள்ளது.மேற்படி சம்பவம் ஏழாலை மற்றும் அயற்கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாக நிலவிவந்த குடும்பப் பிரச்சினையே சம்பவத்துக்கான பின்னணி எனத் தெரியவருகிறது.

உயிரிழந்தவர் இணுவில் கந்தசுவாமி கோயிலடியைச் சேர்ந்த ஜெயரட்ணசிங்கம் ஜெயந்தன் ஆவார்.

இதேவேளை, அவருக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களே ஆகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.