ரிஷார்ட் பதியூதின் மனைவியின் வங்கிக் கணக்கில் குவிந்த பெரும் தொகைப் பணம்..! தீவிர விசாரணையில் குற்றவிசாரணைப் பிரிவு..!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கிதேர் மொஹமட் சஹாப்தீன் ஆயிஷா என்பவரின் தனியார் வங்கி கணக்கில் 50 கோடியே 50 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான கணக்கிற்கு இவ்வளவு பணம் கிடைத்தமை தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்குமாறு மத்திய வங்கி செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நிதி மோசடி விசாரணை பிரிவு இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிடம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.குறித்த பணம் காசோலைகள் ஊடாக வைப்பிடப்பட்டுள்ளதாகவும், அதில் பல முறை சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிதி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரிஷாட் பதியூதீனின் மனைவி, நிர்மாணிப்பு நிறுவனம் மூன்றின் நிர்வாகியாக செயற்படுவதாக விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.மேலும், சில விடயங்களை அடிப்படையாக கொண்டு தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.