புதினங்களின் சங்கமம்

லொறிச்சாரதியின் நித்திரையால் 2 பேர் பலி!!

புலத்சிங்கல ஹொரண வீதியின் தெஹிகஹவெல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனமும் சிறிய ரக லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறிய ரக லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக லொறியின் சாரதி தூங்கியமையால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் சிறிய ரக லொறியின் சாரதியும், லொறியின் உதவியாளரும் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். வலபிடகேயைச் சேர்ந்த அந்தோனி நந்தசேன (52) மற்றும் ருவன் (26) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.