யாழிலிருந்து அண்மையில் கனடாவுக்குச் வந்த இளம் குடும்பஸ்தர் ஜெகநீதன் தற்கொலை முயற்சி!!
யாழிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்றுலா விசாவில் கனடா வந்த 30 வயதான இளம் குடும்பஸ்தர் கனடாவில் தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் மூத்த சகோதரியால் கனடாவுக்கு வரழைக்கப்பட்ட ஜெகநீதன் இரு நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்திலிருக்கும் தனது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சகோதரி தரப்பிலிருந்து தகவல்கள் வந்துள்ளன. அதன் பின்னரே குறித்த குடும்பஸ்தர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவருகின்றது.

