உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் நடந்த பரபரப்பான சம்பவம்! வீடியோ
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நடந்த வித்தியாசமான சம்பவம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்றைய தினம் உலகக் கிண்ண தொடரின் இறுதிபோட்டி அகமதபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது, பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் ஓடினார். இதனால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டது.
இந்த சம்பவம் போட்டியின் 13வது ஓவரின் போது நடந்துள்ளது.
அங்கு பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த நபரொருவர் திடீரென மைதானத்துக்குள் புகுந்து இந்திய வீரர் கோஹ்லிக்கு அருகில் ஓடினார்.
இருப்பினும், உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் குறித்த நபரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் கமராவில் பதிவாகியுள்ளது.