குடுவுடன் கைதான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க தடுப்புக் காவலில்!
ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவை ஜூன் 1 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜெயலத் அனுமதி வழங்கினார்.
சந்தேக நபர் நேற்று முன்தினம் (25) 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார், மேலும் நேற்று (26) பன்னல பொலிஸாரால் பி அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பன்னல, எலபடகம பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், இதற்கு முன்னர் ஒரு முறை வீகனம் ஒன்றில் போதைப்பொருள் கொண்டு சென்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
வீட்டில் ஹெராயின் வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து வீட்டுக்குச் சென்று சோதனை செய்ததாகவும், அவருக்குச் சொந்தமான விளையாட்டு கிண்ணங்களை சோதனை செய்தபோது ஹெராயின இருந்ததாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு ஹெராயின் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அவரை தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

