புதினங்களின் சங்கமம்

இலங்கை கிறிகட் சபையில் பலியாடாகப் போகும் அர்ஜுனா ரணதுங்கா!! நடக்கப் போவது என்ன?

சற்று முன் உலக கிண்ண கிறிகட் தொடரில் வங்கதேசம் இலங்கை கிறிகட் அணியை மடக்கி முறித்து இரண்டு விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ள இந் நிலையில்……………
திரு அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் 6 பேர் கொண்ட Sri Lankan Cricket இடைக்கால சபை நியமிக்கப்பட்டு இருக்கின்றது
குறிப்பாக இலங்கை நீதி அமைச்சர் திரு விஜயதாச ராஜபக்சே அவர்களின் மூத்த மகன் திரு ராஹித ராஜபக்சே அவர்களும் இதில் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றார்.
இந்த திரு ராஹித ராஜபக்சே Brian Thomas (Dinesh Schaffter கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் ) சகிதம் 2,000 மில்லியன் பண மோசடியில் (Money Laundering) ஈடுபட்டு இருந்தார் என Lankaenews அம்பலப்படுத்தி இருந்தது.
அதே போல திரு ராஹித ராஜபக்சே நள்ளிரவில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி தப்பி ஓடிய நிலையில் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
இதன் பிண்ணனியில் கடந்த மாதம் விளையாட்டு துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட திரு ராஹித ராஜபக்சே உள்ளடங்கலான கிரிக்கெட் ஒருங்கிணைப்புக் குழுவை சந்திக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மறுத்து இருந்தது.
குறிப்பாக மேற்படி குழுவை முன்னிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இலங்கை கிரிக்கெட்டின் அரசியல் தலையீடுகள் , அதன் சுயாதீனம் குறித்தும கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் (Sri Lankan Cricket) இடைக்கால சபைக்கு திரு ராஹித ராஜபக்சே நியமிக்க பட்டு இருக்கின்றார்
இது போதாதென்று கடந்த கோட்டாபய ராஜபக்சே அரசாங்கத்தில் வட மேல் மாகாண ஆளுநராகவிருந்த திரு முஸாமில் அவர்களின் மகன் திரு ஹிஷாம் ஜமாலுதீன் அவர்களும் பெயரிடப்பட்டு இருக்கின்றார்.
Sri Lankan Cricket என்கிற அமைப்பு (வீரர்கள் அல்ல) ஒரு Mafia . அதற்கு பல சான்றுகள் இருக்கின்றது. குறிப்பாக,
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண போட்டியில் தமது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கு பெற கிரிக்கெட் (SLC) அதிகாரிகள் கிரிக்கெட் சபை நிதியை பயன்படுத்திய மோசடி கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றது.
இலங்கை கிரிக்கெட் கணனி வலையமைப்ப்பை ஊடறுத்து 5 மில்லியன் அமெரிக்கா டொலர் பணத்தை களவாட முயற்சிக்கப்பட்ட அதே வேளை ஏறத்தாழ 185,000 அமெரிக்கா டொலர்கள் கையாடப்பட்ட முறைகேடு தொடர்பான விசாரணைகள் நிலுவையில் இருக்கின்றது.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் தொடரின் தொலைக்காட்சி உரிமம் வழங்குவது தொடர்பான 187,000 அமெரிக்கா டொலர்கள் மோசடி தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
இங்கிலாந்து தொடர் ஒன்றின் போது நடைபெற்ற 5.5 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் மோசடி தொடர்பான விசாரணைகள் நிலுவையில் இருக்கின்றது.
இது போதாதென்று இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக COPE குழு அறிக்கையின் படி 24 இற்கு மேற்பட்ட நிதி முறைகேடுகள் (Financial Irregularity) பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த முறைகேடுகளுக்கு மத்தியில் அரசியல்வாதி மகன்களை அதிகாரத்திற்கு அழைத்து வந்து மீண்டும் ஒரு தடவை திரு அர்ஜுனா ரணதுங்கா அவர்களை குற்றவாளியாக்கி பலி கொடுக்க போகின்றார்கள் போல இருக்கின்றது.
நன்றி
இனமொன்றின் குரல்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x