கொழும்பு, மட்டக்களப்பு மேலும் பல குண்டு வெடிப்புக்கள்!! நடத்தியது யார்??? அதிர்ச்சிக் காட்சிகள், தகவல்கள்!! (vidieo)
இந்தக் குண்டு வெடிப்புக்கு முஸ்லீம் தீவிரவாதக் குழுவே காரணமாக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது.
இதுவரை ஆறு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் கடும் அல்லோலகல்லோலத்தில் காணப்படுகிறது.
இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என இன்னமும் தெரியவராத நிலையில் வெளி நாட்டுத் தீவிரவாதப் பின்புலத்தில் இது நடத்தப்பட்டிருக்கலாம் என கடுமையான சந்தேக எழுந்துள்ளது.
கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினம் இன்றைய நாளில் கடைப்பிடிகபடும் நிலையில் இந்த சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகள் இதனை நன்றாக திட்டமிட்டே மேற்கொண்டதாக பலதரப்பட்ட தரப்பினரும் தமது சந்தேகங்களை வெளிப்படுத்திவருகின்றனர்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாபு பலப்படுத்தப்பட்டுலதால் பாதிப்புக்கள் ஏதும் நேரும் என்ற நிலையில் குறித்த இடங்களுக்கு மக்களைச் செல்லவேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இதே வேளை பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதே வேளை
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 68 பேருடைய சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த மேலும் 25 பேரின் சடலங்கள் கட்டான தேவாலயத்தில் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் 27 பேருடைய சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், மேலும் 73 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 370 வரையில் காயமடைந்துள்ளதுடன், இவர்களுள் 9 பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.