புதினங்களின் சங்கமம்

யாழில் 17வயதுச் சிறுவன் நிறைசாராய வெறியில் புயல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று பலி!!

உரும்பிராய் விபத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு..! மது போதையில் விபத்து நடந்ததா?

உரும்பிராய் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து
கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளான்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி பின்னர்
மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யோகேந்திரன்
தமிழரசன் (வயது 17) என்ன சிறுவன் உயிரிழந்துள்ளான்.

மேலும் குறித்த சிறுவன் மதுபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன்
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் இருந்து மது போத்தல் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.