புதினங்களின் சங்கமம்

யாழில். பொலிசாரிடம் இருந்து தப்பிக்க வீதியில் மணலை கொட்டி சென்ற மணல் கொள்ளையர்கள்!!

டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தி செல்லப்பட்ட போது, வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாகனத்தை மறித்துள்ளனர்.

அதன் போது, மணலை கடத்தி வந்தவர்கள் வாகனத்துடன் தப்பித்தோடியதுடன் வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றனர்.

இதன் காரணமாக வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன்  போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அதேவேளை வீதியில் கொட்டப்பட்ட மணலை வீதிக்கு அருகில் வசிக்கும் சில வீட்டார் மணலை தமது வீடுகளுக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மணலை கடத்தி சென்ற வாகனத்தை பொலிஸார் இனம் கண்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

May be an image of 1 person, motorcycle, grass and road

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x