புதினங்களின் சங்கமம்

தமிழக முகாமில் யாழ்.வட்டுக்கோட்டை முதியவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு!

தமிழகத்தின் புழல் இலங்கை அகதிகள் முகாமில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், பலாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் (90) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது. பூட்டிய அறைக்குள் அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

புழல் அகதிகள் முகாமில் இவர் தனிமையில் வாழ்ந்து வந்தவர் என குறிப்பிடப்படுகிறது.

இவரது உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.