யாழ். இந்து மகளிர் கல்லூரியில் ஆளுநர் அலுவலக அதிகாரிகள் விசாரணை
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் வசதிக் கட்டணம் பெறப்பட்டமை உள்ளிட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆளுநர் செயலக அதிகாரிகளால் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி நிர்வாகத்தால் மாணவிகளிடம் வசதிக் கட்டணமாக ஆயிரத்து
600 ரூபாவும் க.பொ.த சாதாரண தரத்தில் சித்திபெற்று க.பொ.த உயர் தரத்தைத் தொடரும்
மாணவிகளிடம் 7 ஆயிரத்து 500 ரூபாவும் வசதிக் கட்டணமாக அறவிடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு வழிகளில் மாணவிகளிடம் கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பில் அதிகாரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குச் சென்றுநேற்று விசாரணைகளை
முன்னெடுத்தது என்று தெரிவிக்கப்பட்டது.