புதினங்களின் சங்கமம்

யாழ் பண்ணைப் பகுதியில் அதி வேகமாக வந்து தலைகீழாக கவிழ்ந்த ஓட்டோ!! குழந்தை உட்பட 4 பேருக்கு நடந்த கதி!!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்கு அருகில் பாய்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.முச்சக்கரவண்டியில் சாரதி உள்ளிட்ட ஐவர் பயணித்த நிலையில், அதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.மூன்று பெண்களும் ஒரு குழந்தையுமே விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.