புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் இவர்கள் இருவரும செய்த கொடூர வேலை இது!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக வாகனத்தில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மாதகல் பகுதியையும் மற்றையவர் யாழ்ப்பாண பகுதியையும் சேர்ந்தவர்கள் என அறியமுடிகிறது.சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.