யாழ் காரைநகர் பொன்னாலைப் பாலத்திலிருந்து நிறை வெறியில் கடலுக்குள் காரை விட்டவன் யார்? (Photos)
காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் இன்று மாலை ஒரு கார் வானகமொன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து கடலுக்குள் பாய்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணித்ததாகவும் அவருக்கு எந்தவித காயங்களும் இன்றி மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது, அது போல குறித்த சாரதி மீட்கப்படும் வேளை போதையில் இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர் மேலும் அவர் தென்னிலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் காரைநகர் கசூரினா சுற்றுலாத்தளத்திற்கு வருகை தந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



