புதினங்களின் சங்கமம்

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட கொண்டுவரப்பட்ட
கைதிகளான பாகிஸ்தான் பிரஜைகள் இருவரும், நைஜீரிய பிரஜை ஒருவரும் சிறைக் காவலர்களின்
பிடியில் இருந்து தப்பியோடினர்.

பின்னர் அவர்களை விரட்டிச்சென்று வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர்
சிறைக் காவலர்கள். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் தப்பியோட யாரும்
உதவினார்களா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.