தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிங்கள பெண் வைத்தியர்!!
நுண்ணுயிர் கெல்லி மாத்திரைகள் 35 ஐ உட்கொண்ட பெண் வைத்தியர் ஒருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரவில ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் 34 வயதுடைய விவாகமான பெண் வைத்தியரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் விஷேட வைத்திய நிபுணர் ஒருவர் தனக்கு எப்போது திட்டுவதாகவும், அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குறித்த பெண் வைத்தியர் கூறியுள்ளார்.
மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.