புதினங்களின் சங்கமம்

பிரான்ஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி 13 லட்சம் வாங்கி ஏமாத்தியவனை கடத்தி தாக்கிய யுவதி!!

பிரான்சில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யுவதியிடம் 1.3 மில்லியன் ரூபா மோசடி செய்த நபரைக் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் உட்பட நால்வரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டான நாகொட தேவாலய வீதியில் வசிக்கும் 36 வயதுடைய நபரே கடத்தப்பட்டுள்ளார்.

28 வயதுடைய பெண்ணை பிரான்ஸுக்கு வேலைக்கு அனுப்புவதாக உறுதியளித்து அவரிடம் இருந்து 1.3 மில்லியன் ரூபாவை இந்த நபர் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர் தனது உறவினர்கள் சிலரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் ஞாயிற்றுக்கிழமை(27) பணத்தை மீள தருமாறு கோரினர். ஏமாற்றுக்காரன் டிமிக்கி விட, அவரை கடத்திச் சென்று தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உதை வாங்கிய ஏமாற்றுக்காரனின் தாயாருக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டு, மகனை தாக்குவதையும் காண்பித்துள்ளனர். இது குறித்து தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண் மற்றும் அவரது குழுவினரை கைது செய்துள்ளனர்.