யாழ் பல்கலைக்கழகத்தில் ராக்கிங் செய்யும் சீனி…. அக்காமார் அண்ணாமாரான மயி….கள் மட்டும் வாசிக்கவும்…..
யாழ்ப்பாண பல்கலைகழக சீனியர் அண்ணமார் அக்காமார் ஆகிய ராக்கிங் செய்யும் மயி….களுக்கு
நீங்க இல்லாட்டி பல்கலைகழகம் இடிஞ்சு விழாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்
உங்களுக்கு 6 அறிவு ஏன் இறைவன் படைத்தான் என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள்
மிருக குணம் தென்பட்டால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று காட்டுங்கள்
உங்களுக்கு அம்மா அக்கா தங்கை அப்பா தம்பி அண்ணா உள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
உயிரின் பெறுமதியை பற்றி படித்து பாடமாக்குங்கள்
மரியாதை என்றால் என்பதை பற்றி சிந்தியுங்கள்
உங்கள் வழிகாட்டலில் தான் கனிஷ்ட மாணவர்கள் வாழ்வார்கள் என்ற மூட நம்பிக்கையை சற்று ஒதுக்கி வையுங்கள்
நாம் ஏன் உயிர் வாழ்கின்றோம் ? இந்த உலகிற்கு நாம் என்ன செய்ய வேண்டும் .நாம் எங்கு இருக்கின்றோம் என்பதை பற்றிய கொஞ்ச அறிவை மண்டையில் வைத்திருங்கள்
நீங்கள் பெரிய பருப்பு இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன்
அடேய் பரதேசிகளா அடுத்தவன் மூக்கு வரை மட்டும் செல்லவே உனக்கு அனுமதி .நீ என்ன பண்ணி கிஜிச்சாய் எண்டு ரூமுக்கு கூட்டிட்டு போய் அடிக்கிறது ,உடுப்ப கழட்ட சொல்லுறது ,கண்டதை செய்ய சொல்லுறது ,பொம்பிளை பிள்ளைகளை தூசனத்தாலை பேசுறது
சரி நீ உண்ட அம்மா ,தங்கைச்சி ,அக்காவை கண்டபடி பேசு தூசனத்தாலை பேசு நாங்க கேட்கலை அடுத்தவன் வீட்டு பிள்ளையை பேச உனக்கு என்ன மயி.. தகுதி இருக்கு
படிச்சு என்னத்தை நீங்க கிழிக்க போறீங்க பரதேசிகள்
எங்கடை இனம் என்ன எண்டதை முழுசா படிங்க .
நீங்க மாவீரர் நினைவு தினம் ,முள்ளி வாய்க்கால் நினைவு தினம் எல்லாம் செய்யிறீங்க .ஏன் செய்றீங்க .என்ன காரணம் .அது செய்ய எதெல்லாம் காரணம் இருந்துச்சு எண்டு முதல் படிங்கடா .
விளக்கு கொளுத்திட்டா போல ஒன்னும் ஆகப்போறதில்லை .விளக்கை நீங்க கொளுத்திட்டு எவ்வளவுபாடு எல்லாம் இப்ப பண்ணுறீங்க .
பெண்ணையும் ஆணையும் சரி சமனாக பார்த்தான் என் தலைவன்
பெண்களுக்கு வயது குறைந்தவர்களுக்கு மக்களுக்கு எவ்வாறெல்லாம் மரியாதை அளித்தார்கள் எம் தமிழின வேங்கைகள் .
பொழுது போக்கா நீங்க செய்யிற ஒன்னும் விடுதலைப் புலிகளாக ஆக முடியாது என்பதை மனதை வைத்திருங்கள்
எமது இனம் தமிழினம் என்பதை வீட்டிலிருந்து பாடமாக்குங்கள் .
எமது மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை பெரியாரிடம் கேட்டு வைத்திருங்கள்
.நாம் கல்வியில் எங்கு உள்ளோம் விளையாட்டு துறையில் எங்கு உள்ளோம் பண்பாட்டில் எங்கு சென்று கொண்டிருக்கின்றோம்
கலாச்சாரத்தில் எங்கு செல்கின்றோம்.நமது சமூகம் எங்கு சென்று கொண்டிருக்கின்றோம் என்பதையெல்லாம் கேட்டு அறியுங்கள் .
மக்களுக்கு என்ன வேண்டும் என்ன செய்யலாம் .எதன் மூலம் மக்களுக்கு உதவிகளை பெற்று கொடுக்கலாம் .கல்வி கற்ற சமூகத்தை எவ்வாறு உருவாக்கலாம் .போதையை எவ்வாறு குறைக்கலாம் .தற்கொலை என்பதை எவ்வாறு குறைக்கலாம் விழிப்புணர்வு ஊட்டலாம் என நீங்க சிந்திக்காவிட்டாலும் பறுவாயில்லை அடுத்தவரை நையப்புடைக்காதீர்.மனதை காயப்படுத்தாதீர் .
கனிஷ்ட மாணவர்களின் திறமைகளை முன் கொண்டுவர ,பொது நல மனப்பான்மையை விருத்தி செய்ய பகிடிவதை என்ற பகிடி மூலம் சிலவற்றை வெளிக்கொண்டு வரலாம்.அனால் நீங்கள் செய்யும் மிருகத்தனமான செயற்பாடுகள் ?????
யாழ்ப்பாண பொது மகன் என்பதில் வெட்கப்படுகின்றேன்
திருந்த வேண்டும் கல்வி கற்ற சமூகம் .இல்லையேல் திருத்தப்பட வேண்டும் .
இல்லையேல் அடுத்தவர்கள் நல்லதுக்காக கொடூர மனப்பாங்கை உடையவன் மரணிப்பதில் ஒரு கவலையுமில்லை ஆத்மா சாந்தியடையட்டும்…………