முஸ்லிம்களின் தாடிக்கு வந்த சோதனை ……!!
சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் மதத் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்
என்று அதிகாரிகள் கூறுகிற உய்கர் முஸ்லிம்களை போதனை முகாம்களில் அடைத்து அவர்களுக்கு கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமாக்கியுள்ளது நாம் அறிந்ததே.
இந்த நிலையில் அங்கு முஸ்லிம்கள் தாடியை நீளமாக வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.அது மாத்திரம் இல்லாமல் அங்குள்ள பல பள்ளிவாயல்கள் காணாமல் போயுள்ளது கூகுள் செடலைட் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிபிசி நிருபர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அபிவிருத்தி பணிகளுக்காகவே பல பள்ளிவாயல்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு பி பி சி நிருபருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் காணாமல் போவது தொடர்பாக உலக அளவில் கவலைகள் எழுந்திருந்தன.
10 லட்சம் உய்கர் முஸ்லிம்களை சீனா சிறையில் அடைத்திருக்கலாம் என்ற புகார் ஐநா மனித உரிமைகள் குழுவின் கவனத்துக்கு வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

