புதினங்களின் சங்கமம்

திருக்கேதீஸ்வர நுழைவாயில் அமைப்பதற்கானஅனுமதி இரத்து. பின்னணியில் கூட்டமைப்பு

மன்னார் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் இடை நிறுத்தத்தின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்ப்பட்டுள்ளதாக
மன்னார் வாழ் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

மன்னார் பிரதேச சபையின் அனைத்து மத உறுப்பினர்களுக்கும் இணைந்து மத நல்லிணக்க அடிப்படையில் தோரண நுழை வாயில் அமைப்பதற்கு நேற்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது .இது குறித்து பத்திரிகைகளும் இணைய தளங்களும் மன்னார் பிரதேச சபை மத நல்லிணக்கத்தின் முன்னுதராணமாக செயல்படுவதாக செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த வளைவு அமைப்பதற்கு சில கடும் போக்குடைய கத்தோலிக்க மத தலைவர்கள் மற்றும் மாந்தை கிராம அபிவிருத்தி சங்கம் ,மாந்தை பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கம் என்பன கடும் எதிர்பை தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது .இதனால் வளைவு அமைக்க வழங்கிய அனுமதியை தற்காலிகமாக நிறுத்தும்படி மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாகிர் உத்தரவிட்டுள்ளார்

இதன் மூலம் மன்னாரில் மத நல்லிணக்கத்திற்கு மீண்டும் சாவு மணியடிக்கப்பட்டுள்ளதுடன்
கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்குறித்த வளைவை அமைக்க தற்காலிக தடை விதித்ததன் பின்புலத்தில் இருந்து செயற்பட்டதாக மன்னார் வாழ் இந்துக்கள் கவைலயையும் விசனத்தையும் தெரிவித்துள்ளனர்.