புதினங்களின் சங்கமம்

இலங்கையில் மேலும் 5 பேரை பலி எடுத்தது கொரொனா!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்றைய தினம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.

 

 

நான்கு ஆண்களும், பெண்ணொருவரும் இறுதியாக உயிரிழந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், ஏனைய நான்கு ஆண்களும் கொழும்பு 02, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.