புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு மூங்கிலாறில் போதைவியாபாரி லவனின் மனைவியின் பெண் உறுப்பில் சொருகியிருந்த 15 கிராம் போதைப்பொருள் மீட்பு! Photos

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் கணவன்  லவன் என அழைக்கப்படும் கந்தசாமி சதீஸ்குமார் அவனது மனைவி சுகி உட்பட பவன், பவானந்தன் புவி, விஜயநாத், அஜந்தன் ஆகிய 7 பேர் பேர் ஐஸ் போதைப்பொருளுடன் வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூங்கிலாறு வடக்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் (15.12.2025) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள், 61,000 ரூபா பணம் மற்றும் சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அடசூரிய அவர்களின் ஆலோசனையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திலின அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் பொலிஸ் கொஸ்தாபிள் ஆருஸிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் நாளையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதே வேளை குறித்த போதை வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி கோபாலப்பிள்ளை சாருஜன் என்பவன் அடுத்த வருட முற்பகுதியில் இவர்களை பிணையில் எடுத்து விடுவதாக கூறி லவனின் அக்காவிடம் 50 ஆயிரம் பணம் பெற்றுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

May be an image of one or more people and people smilingMay be an image of one or more people, beard and beachMay be an image of one or more people and people smilingMay be an image of one or more peopleMay be an image of one or more people and people smilingNo photo description available.