யாழில் 67 வயது கனடா மகேந்திரன் மனைவியின் தங்கையான 56 வயது அரச ஊழியருடன் மாயம்!! இருவரது பிள்ளைகளும் கொலை வெறியில்!!
கனடாவிலிருந்து வந்த 67 வயதான தாத்தா விசுவலிங்கம் மகேந்திரன் யாழில் உள்ள 56 வயதான பெண் அரச உத்தியோகத்தர் செல்வலோகினியுடன் (பெயர் சிறிது மாற்றம்) தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண் அரச உத்தியோகத்தர் பென்சனுக்கு விண்ணப்பித்து விட்டு பென்சன் அனுமதி கிடைக்கும் முன்னரே மகேந்திரனுடன் மாயமானதாகத் தெரியவருகின்றது. மகேந்திரனுக்கு கனடாவில் மனைவி மற்றும் 3 திருமணமான பிள்ளைகள் உள்ளது. அதே போல் செல்வலோகினிக்கும் கணவன் மற்றும் திருமணமான நிலையில் ஒரு மகளும் திருமணமாகாத நிலையில் ஒரு மகனும் உள்ளார்கள். கணவர் அரச ஊழியராக இருந்து பென்சன் பெற்றவர் என்பதுடன் கொழும்பில் வசிக்கும் திருமணமான மகளுடன் வசித்து வருகின்றார்.செல்வலோகினி யாழ்ப்பாணத்தில் தனது மகனுடன் வாழ்ந்துள்ளார். மகன் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று அண்மையிலேயே பட்டமளிப்பு விழா முடிவடைந்த நிலையில் உள்ளார்.
இந் நிலையில் கனடாவில் வசித்து வந்த செல்வலோகினியின் ஒன்றுவிட்ட தமக்கை மற்றும் அத்தான் மகேந்திரன் போன்றவர்களிடம் தங்களை கனடாவுக்கு எடுக்குமாறு செல்வலோகினி பலதடைவைகள் கேட்டு வந்துள்ளார். இதனை கனடாவில் இருந்த தமக்கை கண்டு கொள்ளாமல் இருந்த போது 67 வயதான அத்தான் மகேந்திரன் அதனை சாட்டாக வைத்து செல்வலோகினியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த வருட இறுதியிலும் யாழ்ப்பாணம் வந்து மனைவியின் தங்கையான செல்வலோகினி வீட்டிலேயே தங்கி சென்றுள்ளார் அத்தான். இதன் பின்னர் கடந்த மாத இறுதிப் பகுதியில் மீண்டும் வந்த கனடா அத்தானுடன் தனது மகனுக்கும் தெரியப்படுத்தாமல் மாயமாகியுள்ளார் செல்வலோகினி. தாயை வீட்டில் காணவில்லை என்பதால் அவருடைய தொலைபேசிக்கு தொடர்பு எடுத்தும் தொலைபேசி இயங்காத காரணத்தால் தனது தந்தை மற்றும் அக்காவுக்குத் தெரியப்படுத்தி தேடுதலைத் தொடக்கினார் மகன்.
அதன் பின்னர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். இதன் பின்னர் ஓரிரு நாட்களுக்குப் பின் மகனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு எடுத்த செல்வலோகினி தான் சிங்கப்பூரில் நிற்பதாக கூறியுள்ளார். அத்துடன் பொலிசாரின் முறைப்பாட்டை மீளப்பெறுமாறும் கூறியுள்ளார். தான் யாருடன் நிற்பது தொடர்பாக மகனுக்கு தெரிவிக்கவில்லை. இந் நிலையில் கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனது கணவனின் தொடர்பும் இல்லாத காரணத்தால் பெண் ஊழியரின் தமக்கையும் உசாராகி விசாரணையைத் தொடங்கவே இருவரும் சேர்ந்து சிங்கப்பூரில் உல்லாசமாகத் திரிவதை அறிந்துள்ளார்கள். தற்போது இரு குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இருவர் மீதும் கொலை வெறியில் உள்ளதாகத் தெரியவருகின்றது.
பெண் அரச ஊழியர் செல்வலோகினி பாஸ்போட் எப்போது பெற்றார் என்பது தொடர்பாக மகனுக்கே தெரியவில்லை என பொலிஸ் தரப்பிலிருந்து தெரியவருகின்றது. அவர் வசித்து வந்த கிராமசேவகரே தாய் பாஸ்போட் பெறுவதற்கு முயற்சி செய்த விடயத்தையும் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

