யாழ் பல்கலைக்கழக மாணவர்களை திங்கட்கிழமை விடுவிக்க இணக்கமாம்…. அங்கஜன் சொல்கின்றார்
கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் , செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் முயற்சி! ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் என அங்கஜனின் முகப்புத்தகத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இரமநாதன் அவர்களின் ஏற்பாட்டில்,ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் இன்று(10) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஐங்கரன், மாணவ ஆலோசகர் கலாநிதி றாயுமேஸ் ,யாழ் பல்கலைகழக பீடங்களின் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.
ஜனாதிபதி இனால் ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய வருகின்ற திங்கட்கிழமை சட்டமா அதிபரின் அறிக்கை யாழ் மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்டு மாணவர்களின் விடுதலை உறுதியாகி உள்ளதுதாக அங்கஜனது முகப்புத்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.