புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வவுனியா பாஸ்போட் அலுவலகத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞனுக்கு நடந்த கொடூரம்!! (வீடியோ)

வவுனியா பாஸ்போட் அலுவலகத்தில் தனது பாஸ்போட்டில் இருந்த சில தவறுகளை சீர்செய்வதற்காக சென்ற புலம்பெயர் தமிழ் இளைஞன் ஒருவன் அங்கிருந்த மாபியாக்கள் மற்றும் பொலிசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பாஸ்போட் அலுவலர்களின் தவறினை சுட்டிக்காட்டி கதைத்துள்ளான். இதனால் கடுப்பான பாஸ்போட் அலுவலர்கள் அவனை பொலிசாரிடம் மாட்டிவிட்டதாகத் தெரியவருகின்றது. அத்துடன் பாஸ்போட் அலுவலகத்திற் வரிசைகளில் நிற்காது உடனடியாக காசு கொடுத்து பாஸ்போட் வாங்குபவர்களுடன் டீல் செய்யும் அங்குள்ள மாபியாக்கள் பாஸ்போட் அலுவலர்களுடன் இரகசிய தொடர்பில் உள்ளார்கள். அந்த மாபியாக்களை வைத்து பொலிசாரின் முன்னாலேயே குறித்த புலம்பெயர் இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான். குறித்த இளைஞனின் கைகளைக் கட்டி வைத்து பொலிசாரின் முன்னாலேயே இளைஞனை மயங்க மயங்க குறித்த மாபியாக்க தாக்கியுள்ளார்கள். குறித்த இளைஞன் மது போதையில் நின்று தகராறு செய்வதாக கூறியே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இளைஞன் எந்தத் தகராறும் செய்யாது தனக்கு இழைக்கப்பட்ட மற்றும் அங்கு வரிசையில் நிற்கும் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காகவே அங்குள்ள பாஸ்போட் அலுவலர்களுடன் கதைத்ததாக அங்கு நின்ற பலர் தெரிவித்துள்ளார்கள். வவுனியா பாஸ்போட் அலுவலகத்திற்கு பாஸ்போட் வாங்க வருபவர்களிடம் பொலிசாரின் ஆதரவுடன் அங்குள்ள மாபியாக்கள் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து பாஸ்போட் அலுவலர்களுடன் பகிர்ந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.