யாழ் நாவாந்துறையில் இளைஞர்கள் மீது அதிரடிப்படை கொடூரத் தாக்குதல்!! பதற்றம் நீடிக்கின்றது!!
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் நேற்றுப் பிற்பகல் பொம்மைவெளி சந்தியில் உள்ள காணி ஒன்றை முஸ்லீம்கள் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முயற்சி செய்த போது அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி தமது பலத்த எதிர்ப்பைக் காட்டியதை அடுத்த காணி திருட வந்த குறித்த முஸ்லீம் கும்பல் அங்கிருந்து விலகி சென்றுள்ளது.
அதையடுத்து அப்பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் வரவைக்கப்பட்டனர். அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் அங்கு நின்று இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும், ஒரு இளைஞருக்கு கையாலும், இன்னொரு இளைஞருக்கு துப்பாக்கியாலும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காணியை அபகரிக்கும் நோக்கில் நிபாகிர் என்ற மாநகர சபையின் முஸ்லீம் உறுப்பினரும், நித்தியானந்தன் என்ற கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரும் அப்பகுதிக்கு வருகை தந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.