புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக மாணவி மரியலக்சி காதல் தோல்வியில் இறந்தாரா ? புகைப்படங்கள்

நேற்றைய தினம் யாழ் கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடு ஒன்றின் அறையில் சப்பாத்து நுாலை கழுத்தில் கட்டிய வாறு துாக்கில் தொங்கிக் காணப்பட்ட யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவி மரிய லக்சி காதல் தோல்வியால் உயிரிழந்துள்ளதாக அவளது நண்பிகள் சிலர் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த மாணவி யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு கற்றுக் கொண்டிருந்த போது இன்னொரு பீட மாணவன் குறித்த மாணவியை காதலித்து வந்துள்ளதாகவும் இதன் பின்னர் மாணவியை காதலன் தொடர்பு கொள்வதில்லை எனவும் மாணவர்கள் சிலர் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. மன்னாரைச் சேர்ந்த குறித்த மாணவியை காதலித்த மாணவனும் வெளிிமாவட்டத்தைச் சேர்ந்தவன் என தெரியவருகின்றது. ஆனாலும் மாணவியின் தற்கொலை தொடர்பில் பெரும் மர்மம் நிலவுவதாக குறித்த மாணவியுடன் நெருக்கமான நண்பிகள் தெரிவித்துள்ளார்கள்.