யாழில் பரபரப்பு!! தனக்கு தெரியாமல் ஹேரோயின் விற்று பிடிபட்ட மனைவியை பொலிஸ் நிலையத்துக்குள்ளு புகுந்து தாக்கிய நகைக்கடைக்காரன்!!
யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நகைப் பட்டறை உரிமையாளரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஆறுகால்மடம், பழம் வீதியை சேர்ந்த 37 வயதான 4 பிள்ளைகளின் தாயாரே யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (4) அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டை சோதனையிட்ட போது 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.அவரிடம் ஹெரோயின் வாங்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தப் பெண் தற்போதுதான் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த குடும்பம் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளதாகவும் அதிலிருந்து மீள்வதற்காக ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , கைதான மனைவியை பார்க்க வேண்டும் என பொலிஸ் நிலையம் வந்த கணவன் மனைவி மீது பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.
உடனே சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் , கணவனின் தாக்குதலில் இருந்து மனைவியை காப்பாற்றியதுடன் , மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில் கணவனையும் கைது செய்தனர்.
போதைப்பொருடன் கைது செய்யப்பட்ட பெண் ,கணவனுக்கு தெரியாமல் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , பெண்ணுக்கு போதைப்பொருளை விநியோகித்தவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கணவனின் வழிநடத்தலில் மனைவி போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகவும் தான் பிடிபடாமல் இருப்பதற்காக கணவன் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் மனைவியைத் தாக்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இவர்கள் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

