புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவிலிருந்து யாழ் வந்த 53 வயது ஜெசிந்தாவிடமிருந்து தனது 32 வயதான கணவனை மீட்டுத்தருமாறு மனைவி கதறல்!!

கனடாவிலிருந்து கடந்த வருட இறுதியில் யாழ் தீவுப் பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் திருவிழாவுக்கு வந்த ஜெசிந்தா என்ற 53 வயதான குடும்பப் பெண் தனது கணவனை மயக்கி வைத்திருப்பதாக மனைவி ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். வாகனச் சாரதியான தனது கணவன் ஜெசிந்தாவை கட்டுநாயக்காவிருந்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்திருந்தார். அதன் பின்னர் அவரை ஜெசிந்தா பல தடவைகள் சாரதியாக கொழும்பு உட்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளாள். சில நாட்களின் பின்னர் கணவனின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தது எனவும் கொழும்பிலிருந்து வந்த பின்னரும் வீட்டில் தங்காது பல்வேறு சாட்டுக்கள் சொல்லி இரவில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எனவும் மனைவி கூறுகின்றார். அதன் பின்னரே தான் தீர விசாரித்த போது தனது கணவர் ஜெசிந்தாவுடன் ஹோட்டல்களில் தங்கியிருப்பது தெரியவந்தது எனவும் யாழ் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கணவன் ஜெசிந்தாவுடன் தங்கியிருந்த போது தான் அங்கு சென்று நியாயம் கேட்க முற்பட்ட போது தன்னை கணவன் தாக்கியதாகவும் ஜெசிந்தா கூறுகின்றார். அத்துடன் ஹோட்டல் நிர்வாகமும் தனக்கு எதிராக பொலிசாரிடம் முறையிடப் போவதாக கூறியது எனவும் அதனால் தான் வேறு வழியின்றி வெளியேறியதாகவும் ஜெசிந்தா கூறுகின்றார்.

இந் நிலையில் ஜெசிந்தாவின் கணவருடன் ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்பு கொண்ட போது தனது மனைவிக்கு மனநலக்குறைபாடு இருப்பதாக கூறி தொடர்பைத் துண்டித்துள்ளார். ஜெசிந்தாவின் தொலைபேசிக்கு குறித்த ஊடகச் செயற்பாட்டாளர் தொலைபேசி மூலம் தொடர்பு எடுத்த போது கடுமையான அச்சுறுத்தல் அவரால் விடுக்கப்பட்டதுடன் பொலிசாரிடமும் முறையிடப் போவதாக கூறியுள்ளார். அத்துடன் நேற்று முன்தினம் பொலிசாரிடமிருந்து பிரான்சில் உள்ள குறித்த ஊடகச் செயற்பாட்டாளருக்கு வட்சப் மூலமான அழைப்பு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 ஜெசிந்தா தங்கியிருந்த யாழ் பிரபல ஹோட்டல் நிர்வாகத்திடம் குறித்த ஊடகச் செயற்பாட்டாளர் சம்பவம் தொடர்பாக வினாவிய போது தமது ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்களை தாக்க முற்பட்டதாலேயே தாம் பொலிசாரிடம் முறையிட முயன்றதாகவும் தாம்  வயதுக்கு வந்த ஆண், பெண்கள் ஜோடியாக தங்குவதை தடுப்பதில்லை எனவும் கணவன், மனைவி சண்டையால் அருகில் இருந்த அறைகளில் உள்ளவர்கள் குழப்பமடைந்த காரணத்தாலேயே தாம் முறையிட முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

ஜெசிந்தா வேலனைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் கனடாவின் கியூபெக் பகுதியில் உள்ள எட்மண்டன் பகுதியில் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு சிங்கள் மதராக வசித்து வருபவர் எனத் தெரியவருகின்றது. இவருக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளதாகவும் அவர்களும் ஜெசிந்தாவுடன் வசிப்பதில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஜெசிந்தாவின் துர்நடத்தை காரணமாகவே கணவன் மற்றும் பிள்ளைகள் ஜெசிந்தாவை பிரிந்து வாழ்வதாக வேலணைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

குறிப்பு – இந்தப் புகைப்படம் 6 வருடத்திற்கு முற்பட்டது.

May be an image of smiling