விகாரைகளில் நடக்கும் பாலியல் செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கையாம்!!!!
பன்சலைகளில் நடக்கும் அசம்பாவிதங்களை சிங்கள அரசு கண்டு கொள்ளாது. மாறாக அதனை வெளியிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்
அதாவது பௌத்தம் செய்யும் தவறுகளை சிங்கள அரசு காப்பாற்றும். பதிலுக்கு சிங்கள அரசின் இனவாதத்திற்கு பௌத்தம் துணை நிற்கும்.
சிங்கள அரசு மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா நாட்டு அரசுகளும் தமது நாட்டில் உள்ள பெருபான்மை மதத்தை அரவணைத்துக்கொள்கின்றன.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவான மதத்தையும் அதன் பிறங்போக்கான கருத்துகளையும் மறுத்தே முதலாளித்துவம் உருவானது.
ஆனால் இன்று உலகம் பூராவும் முதலாளித்துவ அரசுகள் இந்த பிற்போக்கான மதத்தைக் கட்டிக் காக்கின்றன.
ஏனெனில் உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்கள் மேலெழுந்துவிடாமல் அழுத்திப் பிடிக்கும் கருவியாக மதம் இருக்கின்றது.
உலகம் உருண்டை என்று கண்டுபிடித்த விஞ்ஞானியை கிருத்தவ மதத்தின்பேரால் கொன்ற பாப்பரசர் கூட்டத்தை முதலாளித்தவ அரசுகள் பேணிப் பாதுகாக்கின்றன.
அந்த பாப்பரசர் கூட்டம் விஞ்ஞானிகள் கண்டு பிடித்த அப்பிள் போனை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி பயன்படுத்துகின்றன.
இந்த கூட்டுக்களவாணிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி
பாலன்தோழர்

