புதினங்களின் சங்கமம்

அல்லைப்பிட்டி படுகொலைக்கு கட்டளை இட்டவர் தேசிய புலனாய்வின் பிரதானியாகிறார்!

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (வியாழக்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் ஜூன் மாதம் 8ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ருவன் குலதுங்க 1984ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து.தமிழ் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு யுத்ததின் போது ஒரு முக்கிய படையின் கட்டளையதிகாரியாகவும்.2007 தொடக்கம் யாழ்ப்பாணம் திறந்தவெளிச்சிறச்சாலையாக படுகொலைகளும் காணமல் ஆக்கப்படுதல்களும் மலிந்து போன ஒரு தேசமாக இருந்த காலப்பகுதியில் யாழ் நகரப்பகுதியின் இராணுவப்பொறுப்பதிகாரியாக இருந்தவராவார்.இவரின் கட்டளையின் பேரிலேயே அல்லைப்பிட்டிப் படுகொலை உட்பட பல்வேறு படுகொலைகளும் காணமல் ஆக்கப்படுதல்களும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்த போர்க்குற்றவாளி மீண்டும் பதவிக்கு வந்திருப்பதானது தமிழ் மக்களுக்கு மேலும் அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது.