யாழ் மானிப்பாய் மருதடி பிள்ளையாரும் அரசியலில் குதித்தார்!! (Video)
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க விநாயகர் ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் இன்று மெமோறியல் ஆங்கில பாடசாலையில் நடைபெற்று வருகிறது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி யசோதா முன்னிலையில் குறித்த தேர்தல் நடைபெற்று வருகிறது.
மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவில் நிர்வாக சபையினை தெரிவு செய்வதற்கான தேர்தல், நாட்டின் ஜனாதிபதியை தெரிவுசெய்வது போன்று இன்று நடைபெறுகின்றது.
100 வீதம் சேவை அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டிய நிர்வாக சபைக்கு இப்படி போட்டி போட்டு தேர்தல் தேவையா?
ஆண்டவன் சந்நிதி.. நேர்மையாக, வெளிப்படைத்தன்மையாக, அந்த பிரதேசத்தினை சார்ந்தவர்கள் ஏகமனதாக ஒரு கோயில் காரியம், தர்மகாரியத்தை இந்த ஆலய சமூகத்தால் ஒற்றுமையாக செய்ய முடியவில்லை என்றால் கோயில்கள் எதற்கு?
கொள்ளையடிக்கவா? பக்தி பகல் வேஷமா? கேவலம் கெட்ட சனமாக மாறிவரும் எமது இனம்






