யாழில் சம்பவம்!!பிறந்து சில நாட்களேயான 7 நாய்க் குட்டிகளை தீயில் எரித்துக் கொன்ற கொடூரன்!!
ஒரு மாதம் நிரம்பாத ஏழு நாய்க்குட்டிகளை ஒருவர் தீட்டு கொன்ற கொடூர செயல் சாவச்சேரி பொலிஸ் பிரிவில் உட்பட்ட மிருசுவில் தவசி குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்த நபர் வளர்த்து வந்த நாய் அண்மையில் ஏழு குட்டிகளை ஈன்றுள்ளது. கடந்த சனிக்கிழமை அந்த குட்டிகள் தாயிடம் பால் குடிப்பதற்காக சத்தமிட்டுள்ளன.
குட்டிகள் சத்தமிடுவது தனது தூக்கத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறிய அந்த நபர், கிடங்கு ஒன்றை வெட்டி அதில் தீமூட்டி, நாய்க்குட்டிகளையும் அதற்குள் உயிருடன் போட்டு எரித்துக் கொன்றுள்ளார்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிசாரிடமும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமும் தொலைபேசி வாயிலாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய முடியுமான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
