புதினங்களின் சங்கமம்

கனடா ஆசையால் சிங்கப்பூரில் யாழ் தமிழ் இளைஞர்களிற்கு நேர்ந்த கதி!

போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டையுடன் சிங்கப்பூரில் கைதான இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களிற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

21 வயது மற்றும் 32 வயதினை உடைய இருவருக்குமே சிறைத்தண்டனை விதித்துள்ளது.

21 வயது இளைஞனிற்கு ஏப்ரல் 28ஆம் திகதியும், 32 வயது இளைஞனிற்கு ஜூன் 4ஆம் திகதியும் தலா எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டை வைத்திருந்ததற்காக 21 வயது இளைஞன் தண்டிக்கப்பட்டார்.

போலி ஆவணங்களைப் பெற 21 வயது இளைஞனிற்கு உதவிய 32 வயது இளைஞனிற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி இருவரும் சிங்கப்பூரில் நுழைய முயற்சி செய்தபோது கைது செய்யப்பட்டனர்.

கனடாவுக்குள் அகதியாக நுழைய விரும்பிய 21 வயது இளைஞன், சேம் என்பவரின் உதவியை நாடியுள்ளார்.

கனடா செல்வதற்கான ஆவணங்களைத் தயாரித்து கொடுத்தால் 9,000 சிங்கப்பூர் டொலர் தருவதாக சேமிடம் 32 வயது இளைஞன் உறுதி கூறினார்.

உடனே 21 வயது இளைஞனுடன் தொடர்பு கொண்ட 32 வயது இளைஞன் பயணத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள மலேசியரான முகமட் என்பவரிடமிருந்து 21 வயது இளைஞன் போலி ஆவணங்களைப் பெற்றார்.

பின்னர் பிப்ரவரி 28ஆம் திகதி 21 வயது இளைஞன் மற்றும் 32 வயது இளைஞன் இருவருமாக இணைந்து கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டனர்.