புதினங்களின் சங்கமம்

யாழ் இந்துக்கல்லுாரியின் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவன் கொழும்பு பல்கலையில் உயிர்மாய்த்தது ஏன்?

JHC Prefect
National Gold Medalist
Engineering Student
Best Player of JPura-2023
அடுக்கி கொண்டே போகலாம்… வயது சிறிது சாதனைகள் பெரிது.
கண்ணெதிரே பார்த்து வியந்த ஒருவன். நம் பலரின் முகமாய் பல அரங்குகளில் நம்மை பிரதிபலிக்க செய்தவன். விருதுகளும் பதக்கங்களும் அவன் கையில் தவழ ஆசைப்பட்டு ஓடி வரும். இவ்வாறான ஒரு சிறப்புத் தேர்ச்சி பெற்றவன் துாக்கில் தொங்கி இறப்பது என்பது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவனான இவன் பல்கலைக்கழகத்தில் பாரம்துாக்கல் போட்டியில் கலந்து முன்னிலை வகித்துள்ளார். இதனால் அவருக்கு சில போட்டித்தன்மையான நிலை இருந்ததாக கூறப்படுகின்றது, இருப்பினும் இவ்வாறான ஒரு மாணவன் துாக்கில் தொங்கி இறந்ததற்கான காரணம் தற்கொலையா? அல்லது கொலையா எனத் தெரியவில்லை. இதே போல் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ் வரணியைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவன் உயிர்மாய்த்துள்ளான்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூளை வளமானவர்கள் இவ்வாறு இறப்பதற்கு காரணம் திட்டமிட்ட சதியா? என்பது தொடர்பாக அவதானம் செலுத்துதல் வேண்டும். ஏற்கனவே மருத்துவத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்று கொழும்பு சென்ற பிரபல வைத்தியரின் மகளும் போதைப் பொருளுக்கு அடிமையாகி மனப்பிறள்வுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது