புதினங்களின் சங்கமம்

ரிஷாட் பதியுதீன் அமைச்சர் பதவியை வி்ட்டு விலகுகின்றார்!!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அடுத்த ஓரிரு நாட்களில் பதவிவிலகுவார் என நம்பகரமாக தெரிய
வருகிறது. நாளை காலையில் அமைச்சர் ரிசாட்டை நேரில் அழைத்து, அமைச்சு பதவியிலிருந்து
விலகுமாறு ஜனாதிபதியால் கோரப்படுவாரென தெரிகிறது. அனேகமாக அடுத்த சில நாட்களில்
ரிசாட் பதியுதீன் பதவிவிலகும் நிலைமையேற்படுமென தெரிகிறது.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் , ஆளுனர்கள் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை
பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, அத்துரலிய ரத்ன தேரர் எம்.பி உண்ணாவிரத போராட்டம்
ஆரம்பித்த பின்னர் உருவாகியுள்ள நிலைமையிலேயே, ரிசாட் பதியுதீன் பதவிவிலகும்
நிலைமையேற்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோரினால் தான் பதவிவிலக தயாராக இருப்பதாக ஏற்கனவே ரிசாட் பதியுதீன்
தெரிவித்திருந்தார். அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருப்பதால், அது தென்னிலங்கையில்
அரசுக்கு எதிரான அதிருப்தியை அதிகரிக்குமென ஜனாதிபதி தனக்கு நெருக்கமானவர்களிடம்
தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிரு்தபடியே, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இது தொடர்பில் ஜனாதிபதி
பேச்ச நடத்தியுள்ளார். ரிசாட்டை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டியதன் அவசியத்தை
ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தொலைபேசி உரையாடலையடுத்து இன்று முற்பகல் அமைச்சர் ரிசாத்துடன் பிரதமர்
ரணில் அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

நாளை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன், தற்காலிகமாக
பதவிவிலகுமாறு ஜனாதிபதியால் கோரப்படவுள்ளார். தெரிவுக்குழு விசாரணைகளின் பின்னர்,
அதில் குற்றவாளியாக நிரூபிக்கப்படாத பட்சத்தில் மீளவும் பதவியேற்கலாம், தற்போதைய
சர்ச்சையை தற்காலிகமாக முடித்து வைக்க பதவி துறப்பதே சரியென மைத்திரி தெரிவிப்பாதென
தெரிகிறது.

பிரதமரும் கிட்டத்தட்ட இதேநிலைப்பாட்டை எடுத்துள்ளதால், நாளை அனேகமாக ரிசாட் பதவி
விலகல் கடிதத்தை கையளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.