ஐபிசி முதலாளி பாஸ்கரனின் திருவிளையாடலும் லைக்கா முதலாளி சுபாஸ்கரனின் செயற்பாடும்!!
•லைக்கா முதலாளியும் ஐபிசி முதலாளியும்
இருவரும் ஈழத் தமிழர்கள்
இருவரும் புலம்பெயர்ந்த அகதிகள்
இருவரிடமும் பல ஊடகங்கள் உண்டு.
லைக்கா முதலாளி சிறையில் இருந்து விடுதலையான 28 அரசியல் கைதிகளுக்கு தலா 25லட்சம் ரூபாவீதம் 7 கோடி ரூபா வழங்கியுள்ளார்.
ஆனால் ஐபிசி முதலாளி கோடிக்கான ரூபா செலவு செய்து முன்னாள் போராளிகள் வறுமையில் இருப்பதாக பிரச்சாரம் செய்கிறார்.

(இந்த போட்டி உலகில் வளர்வது என்பது சாதாரண விடயம் அல்ல. பல பிரச்சனைகள், சவால்கள், குழிபறிப்புக்கள், விமர்சனங்கள், காட்டிக்கொடுப்புகள், பக்க சார்புகள் என பல விடயங்களை கடந்தாக வேண்டும்.
அவை அத்தனையையும் தாண்டி எமது மக்களுக்காக சிந்திக்கும் ஒரு சிலருள் லைக்காவையும் பார்க்கலாம்.அந்த வகையில் விமர்சனங்களுக்கு அப்பால் Lyca வை வாழ்த்தலாம்.)
இலங்கை அரசாங்கத்தினால் அண்மைக் காலங்களில் விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன், செனரத்கே லக்ஸமன்குரே, அஜித் சிஸாந்த எதிரிசிங்க, வைரமுத்து சரோஜா, பந்துளகஜவீர குணரட்ண, கந்தையா இளங்கோ, ராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஸன், ஞனேசன் தர்சன்) லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாய்களை கடந்த செவ்வாய்கிழமை (06.06.23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார்.
ஜனாதிபதியுடனான ஒவ்வொரு சந்திப்புகளிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் விடுத்த வேண்டுகோள்களாலும், நீதிமன்ற தீர்ப்புகளாலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பாலும், பிணை அடிப்படையிலும், இதுவரை 26 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
நீண்டகாலம் சிறைகளில் தமது வாழ்வை தொலைத்த இவர்கள் தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பதனை உணர்ந்த லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் செயற்பாட்டு வடிவமே ஞானம் அறக்கட்டளையின் ஊடான இந்தப் பேருதவியாக அமைந்துள்ளது.
அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை, முதற்கட்டமாக விடுதலை பெற்ற 8 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் தலா 25 லட்சம் ரூபாய்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதிவுகள் சமூகவலைத்தளங்களிலிருந்து பிரதி பண்ணப்பட்டவை!….(Copy)

