புதினங்களின் சங்கமம்

கண்டியில் இரு பெண் பொலிசாருக்கு நடுவீதியில் குஞ்சுமணியைக் காட்டியவரை துரத்திப் பிடித்த பெண் பொலிஸ்!!

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பட்டப்பகலில் இரண்டு பெண் பொலிஸாரிடம் தன்னை நிர்வாணமாக வெளிப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, பெண் பொலிஸார் இருவரும் குறித்த நபரைத் தாக்கி அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கண்டி நகர மையத்தில் நேற்று (06) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் பொல்கொல்ல, தலவின்ன பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு பெண் பொலிஸாரும் தமது பணியை நிறைவு செய்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு முன்னால் வந்த நபர், தனது நிர்வாண உடலைக் காட்டிவிட்டு ஓட முயன்றிருக்கிறார். ​​இரண்டு பொலிஸாரும் அவரை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கண்டி பொலிஸ் நிலையம் சுமார் 500 மீற்றர் தொலைவில் உள்ள நிலையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அந்த நபரை நடக்க வைத்து பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.