யாழில் 33 வயது சந்திரதாஸ் சடலமாக மீட்பு!! சடலத்துக்கு அருகில் பெண்களின் உள்ளாடைகள்!! கள்ளக் காதல் கொலையா?(Photos)
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இளைஞர் ஒருவரின் சடலம வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பிறிதொரு வீட்டில் இருந்தே இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. சடலத்துக்கு அருகில் சம்பவம் நடந்த வீட்டிலிருந்த இளம் பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டன.
அவரது வீட்டிற்கு அண்மையாக உள்ள 3ஆம் குறுக்குத்தெருவில் உள்ள பிறிதொரு வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டிற்குள் உயிரிழந்தவர் அத்துமீறி நுழைந்திருக்கலாமென கருதப்படுகிறது.
சடலம் மீட்கப்பட்ட வீட்டிலிருந்த பெண் பிள்ளைகளின் உள்ளாடைகள், உயிரிழந்தவரின் சடலத்துக்கு அருகில் காணப்பட்டது.
பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

