இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

பா.ரஞ்சித் பிடுங்கிய தேவைல்லாத ஆணி !

“இராசராச சோழன் 400 பெண்களை விலை மாதர்களாக மாற்றி அவர்களை வைத்து “மங்கள விலாஸ்” நடத்தியவர் : பா.ரஞ்சித். //

இராசராச சோழன் காலத்திற்குப் பிறகு 800 ஆண்டுகள் கழித்து நாயக்க மன்னர்கள் ஆட்சி. அவர்களுக்கு 500 ஆண்டுகளுக்குப் பிறகு மராத்தியர்கள் ஆட்சி. மராத்திய மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டதே மங்கள விலாஸ் .

இராசராசன் காலத்தில் இருந்தது கோயில் ஆடல் மகளிர் எனும் தேவதாசி முறை. அப்டோது கோயில் 24 மணி நேரமும் திறந்திருக்கவும் கோயில் அர்ச்சகர்கள் “முப்படி” முறை அதாவது 3 ஷிப்டுகள் பணியாற்ற வேண்டும். இப்போது போல “பகவான் ” காலைல 7 மணிக்கு எழுந்து 12 மணிக்குத் தூங்கப் போயிடுவார். அப்புறம் 4 மணிக்கு எழுந்து வந்து இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனம் தருவார்” னு ஐயர்வாள் தன் வசதிக்குச் சொல்வது போலவும், இதை மீறிக் கோயிலை ராத்திரி திறந்து வச்சா பகவான் குத்தம், ஆகம விதிக்கு எதிரானது என்று எல்லாம் இராசராசனிடம் கதை அளக்க முடியவில்லை. 24 மணி நேரமும் பெரிய கோயில் திறந்திருந்தது. பூசைகள் நடந்தன.

கடவுள் புகழ் பாடும் ஆடல் மகளிரும் 3 ஷிப்டுகளில் பணியாற்றி சிவத்துதிப் பாடல்களைப் பாடி ஆடி வந்தனர்.

தேவதாசி முறை பொட்டுக் கட்டுதல் பாலியல் தொழிலாக மாற்றப் பட்டது மிகவும் பிற்காலத்தில் .

இந்த ஆடல் மகளிரிடமிருந்த கலையான சதுராட்டமே தற்போதைய பரதநாட்டியம்.

எப்படி, தமிழர் கலையான கரகாட்டம் வரவேற்பும், வருவாயும் இன்றி புறக்கணிக்கப்பட்டதால் இரட்டைப் பொருள், பாலியல் வக்கிரம் பேசும், ரெக்கார்ட் டான்ஸ் போல காலப்போக்கில் கட்டாயம் மாற்றப்பட்டதோ, எப்படித் தமிழரின் இசை வடிவமான பறை இசை, சாவுக்கும், எழவு வீட்டிற்கு மட்டுமான இசையாக மாறிப் போனதோ, அதே போலத்தான் பக்தி பாடிய கோயில் ஆடல் மகளிர் தேவதாசி என்பது தேவரடியார் ஆகி ரஞ்சித் குறிபிட்ட “தேவிடியா” வீடு எனும் கொச்சைப்படு பொருளில் பாலியல் பொழுது போக்கு போல மங்கள விலாஸ் ஆனது மராத்தியர்கள் ஆட்சியில், இராசராச சோழன் ஆட்சியில் அல்ல. இந்த இரண்டு மாற்றங்களுக்கிடையில் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பெருத்த இடைவெளி உள்ளன.

விஸ்வா விஸ்வநாதன்