கூட்டமைப்பின் சிபார்சில் யாழ் பல்கலைக்கழக க ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்களின் விபரம் இதோ!!
நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சினால் 424 பேரின் விவரங்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களில் நிலவும் குறிப்பிட்ட சில பதவிகளுக்கான பெயர்கள் உயர்கல்வி
அமைச்சினூடாகவே பரிந்துரை செய்யப்படல் வேண்டும் என்ற சுற்றறிக்கை 876 க்கு அமைவாக,
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின்
பரிந்துரைகளின் பிரகாரம் கிடைக்கப்பட்ட பெயர்களில் 424 பேரது விவரங்களை யாழ்ப்பாண
பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி நேரடியாக உயர் கல்வி
அமைச்சு அலுவலகத்திலிருந்து பெற்றுச் சென்றுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்
அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் படி, முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு 115 பேரும், நூலக தகவல் உதவியாளர்
பதவிக்கு 19 பேரும், நூலக உதவியாளர் (தரம் 2) பதவிக்கு 08 பேரும், அலுவலக (வேலை)
உதவியாளர் பதவிக்கு 109 பேரும், கவனிப்பாளர் ( தாழ் தரம்) பதவிக்கு 04 பேரும், ஆய்வு
கூட உதவியாளர் பதவிக்கு 150 பேரும், இறைச்சி வெட்டுபவர் பதவிக்கு ஒருவரும்,
பாதுகாப்பு ஊழியர் பதவிக்கு 15 பேரும், முகாமைத்துவ உதவியாளர் (களஞ்சியக் காப்பாளர்)
பதவிக்கு 03 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையில் உயர்கல்வி
அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் எம். ஏ. ஐ. கே. மந்திரிரத்னாவினால்
பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தப் பட்டியலில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.
சித்தார்த்தன், சி. சிறீதரன், ஈ. சரவணபவன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் சிபார்சுக்கமைய அனுப்பி வைக்கப்பட்ட பெயர்கள்
சேர்க்கப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அலுவலக வட்டாரங்கள் மேலும்
தெரிவித்தன.

