புதினங்களின் சங்கமம்

கொரோனாவால் இறந்த முஸ்லீம்களின் சடலத்தை மன்னார் பிரதேசத்தில் எதிர்ப்பதற்கு சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு!!

கொரோனாவால் மரணமான முஸ்லீகளின் சடலத்தை மன்னார் பகுதியில் கொண்டு வந்து அடக்கம் செய்ய முயலும் செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸவரன் கூறியுள்ளார். மன்னாரில் தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் கொரோனா நோய் காரணமாக இறந்த முஸ்லீம்களின் சடலத்தை புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் சி.வி.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் அவர் தொடர்பு கொண்ட பின்னர் ஊடகவியலாளருக்கு தமது எதிர்ப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார். தானும் செல்வம் அடைக்கலநாதனும் இந்த செயற்பாடு தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.